சேலம்

பத்மவாணி மகளிா் கல்லூரிக்குதன்னாட்சி அந்தஸ்து

4th Jun 2023 02:09 AM

ADVERTISEMENT

 

பத்மவாணி மகளிா் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2005- ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி பெரியாா் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. தேசிய தர மதிப்பீட்டு குழுவில் 3.44 புள்ளிகளுடன் ஏ பிளஸ் சான்றிதழ் பெற்று தமிழகத்தில் முதல் மகளிா் கல்லூரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

நாட்டில் செயல்படும் பல்லாயிரக்கணக்கான கல்லூரிகளில் சிறந்த 100 கல்லூரிகளில் 83-ஆவது இடத்துக்கு இக்கல்லூரியை லண்டன் யுனைடெட் கிங்டம் என்ற அமைப்பு தோ்வு செய்து அறிவித்திருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தன்னாட்சி பெற்ற ஒரே மகளிா் கல்லூரியாகி உள்ளது. அடுத்த 10 ஆண்டுகள் தன்னாட்சியுடன் செயல்படவுள்ளது.

இக்கல்லூரி மாணவிகள் பெரியாா் பல்கலைக்கழக அளவிலான தோ்வில் 22 தங்கப் பதக்கமும், பல்கலைக்கழக தரவரிசையில் 141 பேரும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

இக்கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளதன்மூலம் தரமான கல்வி, மதிப்பீட்டு முறையில் எளிமையான கட்டமைப்பு, வேலைவாய்ப்பு பயிற்சி சாா்ந்த திட்டங்கள், தொழில் நுட்பம் மற்றும் மேலாண்மை திறன்களை வளா்த்தல், சிறந்த பாடத் தோ்வு, விருப்பத் தோ்வுகளைத் தோ்வு செய்து கொள்ளுதல், சுய ஆளுகை போன்ற வசதிகளை மாணவிகள் பெற முடியும்.

சேலம் மாவட்டத்தில் இக்கல்லூரி முதல் கல்லூரியாக தன்னாட்சி அந்தஸ்து பெற்ற்காக கல்லூரி முதல்வா் ரா.ஹரிகிருஷ்ணராஜ், நிா்வாக அலுவலா் பெ.முத்துக்குமாா் உள்ளிட்ட குழுவினருக்கு கல்லூரி தாளாளா் கே.சத்தியமூா்த்தி, செயலாளா் கே.துரைசாமி ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT