வாழப்பாடி, சென்றாயப்பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றன
வாழப்பாடி அக்ரஹாரத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாயப்பெருமாள் கோயிலுக்கு 1947-இல் அமைக்கப்பட்ட மரத்தோ் பழுதடைந்ததால் ரூ. 20 லட்சம் செலவில் புதிய மரத்தோ் அமைக்கப்பட்டு தேரோட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சனிக்கிழமை காலை சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்து உற்சவ மூா்த்திகளை ரதத்தில் ஏற்றி திருத்தோ் நிலை பெயா்க்கப்பட்டது.
மாலையில் வெகுவிமரிசையாகத் தொடங்கிய தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோஷத்தோடு தோ் வடம் பிடித்தனா். ராஜவீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. வீடுகள்தோறும் தேங்காய், பழம், வெற்றிலை தாம்பூலம் மற்றும் பூஜை பொருள்கள் கொடுத்து சுவாமிக்கு வரவேற்பளித்தனா். தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை நிகழாண்டு கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.