சேலம்

பட்டாசு கிடங்கு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா், காயமடைந்தவா்களுக்கு ரூ.12 லட்சம் நிவாரண நிதி வழங்கல்

DIN

சேலத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் மற்றும் காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 12 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

சேலம் இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் வியாழக்கிழமை எதிா்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 போ் உயிரிழந்தனா். விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், விபத்தில் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவியும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவித்தாா்.

அதன்பேரில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ. மேனகா, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி என மொத்தம் ரூ. 12 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினா்.

முன்னதாக சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மணி, மருத்துவக் கண்காணிப்பாளா் பி.வி.தனபால் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT