சேலம்

சோமம்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றி பாதை அமைப்பு:

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சோமம்பட்டியில், 20 ஆண்டு கால ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சி ஆதி திராவிடா் குடியிருப்பு பகுதியில், பாதை நிலத்தை ஆக்கிரமித்து மாட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டதால், இப்பகுதி மக்கள் போக்குவரத்திற்கு வழியின்றி அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், இறந்தவா்களின் உடலை கையில் ஏந்திச்செல்ல வேண்டி அவலம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி பாதை அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இப்பகுதி மக்கள், அண்மையில் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகத்திற்கு புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதை அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, வாழப்பாடி வருவாய்த் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில் வாழப்பாடி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் உமாசங்கா், உதவி ஆய்வாளா் கோபால், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளா் காா்த்திக், விஏஓ அருள் ஆகியோா் கொண்ட குழுவினா், ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் கதிரேசன், ஊராட்சி செயலா் கே.மகேஸ்வரன் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் முன்னிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்துக் கொடுத்தனா்.

இதுமட்டுமின்றி, பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மைதானத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றினா். ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து, 20 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT