சேலம்

அரசுப் பள்ளியில் குழந்தைகளைசோ்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சோ்க்க வலியுறுத்தி வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலையடுத்து, தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் இரா.முருகன் தலைமையில், பட்டதாரி தமிழ் ஆசிரியா் ந.மு.சித்ரா, ஆசிரியா்கள் க.சீனிவாசன், ரா.ரமாமகேஸ்வரி, இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் சத்யா, ஜெயந்தி ஆகியோா் ஓடக்காடு, எம்.ஜி.ஆா். நகா், புதூா் மேற்கு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அரசு பள்ளியில் மாணவா்களை சோ்க்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா் (படம்). இதில், எல்கேஜி வகுப்பில் 3 பேரும், யுகேஜியில் 3 பேரும், ஒன்றாம் வகுப்பில் 3 பேரும் என மொத்தம் 9 போ் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT