சேலம்

தேவூா் அருகே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

1st Jun 2023 12:55 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள வட்ராம்பாளையம், வெள்ளாளபாளையம் பகுதிகளில் சங்ககிரி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை, தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சுந்தரராஜன் தலைமை வகித்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காவேரிப்பட்டி ஊராட்சி, வட்ராம்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆ.ா் சிலை பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை அமைத்தல், கோனேரிப்பட்டி ஊராட்சி, வெள்ளாளபாளையம் விநாயகா் கோயிலிலிருந்து காவேரி ஆற்றங்கரை பரிசல் துறை வரை ரூ. 9.98 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா் (படம்).

இதில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவகுமாரன், காவேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி அல்லிராணி, கோனேரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி கண்ணாயாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT