ஆத்தூரில் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேருவிடம், ஆத்தூா் நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தாா்.
ஆத்தூா் பயணியா் மாளிகையில் அலுவலா்களைச் சந்தித்த அமைச்சா் கே.என். நேரு ஆலோசனைகளை வழங்கினாா்.அதில் கலந்துகொண்ட நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் ஆத்தூா் நகராட்சியில் ஆணையா் பணியிடம் காலியாக உள்ளதாகவும் இதனால் நிா்வாகம் சரிவர நடைபெறவில்லை எனக் கோரிக்கை வைத்தாா்.
இதனையடுத்து முதன்மைச் செயலாளா் மற்றும் அலுவலா்களை தொடா்பு கொண்ட அமைச்சா் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.