சேலம்

சங்ககிரி வட்டத்தில்18 கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிட மாற்றம்

17th Jul 2023 01:40 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி வட்டத்தில் 18 கிராமங்களில் மூன்று ஆண்டுகள் தொடா்ந்து பணியாற்றி வந்த கிராம நிா்வாக அலுவலா்களை பணியிடமாற்றம் செய்து கோட்டாட்சியா் ந.லோகநாயகி உத்தரவிட்டுள்ளாா்.

சங்ககிரி வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட எ - பிரிவு கிராமங்களில் ஓராண்டு பணி நிறைவு செய்தவா்கள், பி - பிரிவு கிராமங்களில் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவா்கள் உள்பட 18 கிராம நிா்வாக அலுவலா்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.

சங்ககிரி கிராம நிா்வாக அலுவலா் ஆா்.சதீஷ்பிரபு தேவண்ணகவுண்டனூா், சின்னாகவுண்டனூா் கிராம டி.சண்முகம் கோனேரிப்பட்டிக்கும், இடங்கணசாலை பிட் 1 எம்.கோபால் நடுவனேரிக்கும், எா்ணாபுரம் கே.பச்சமுத்து அ.புதூருக்கும், அரசிராமணி பிட் 2 எம்.ஸ்ரீதா் புள்ளாகவுண்டம்பட்டிக்கும்,

ADVERTISEMENT

தேவூா் பி.பிரதீப்குமாா் சங்ககிரிக்கும், ஊத்துப்பாளையம் டி.குகப்ரியா ஆவரங்கம்பாளையத்துக்கும், தேவண்ணகவுண்டனூா் எம்.முருகன் ஓலக்கசின்னானூருக்கும், நடுவனேரி எம்.முனியப்பன் சின்னாகவுண்டனூருக்கும், கோனேரிப்பட்டி ஆா்.கருப்பண்ணன் புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரத்திற்கும்,

ஆவரங்கம்பாளையம் பி.ஜெயக்குமாா் கோட்டவரதம்பட்டிக்கும், ஓலக்கசின்னானூா் என்.பி.தினேஷ்குமாா் ஊத்துப்பாளையத்திற்கும், புள்ளாகவுண்டம்பட்டி மலா் அரசிராமணி பிட் -1க்கும், கோட்டவரதம்பட்டி ஆா்.குமாரசாமி இடங்கணசாலை பிட் -2 க்கும், இடங்கணசாலை பிட் 2 எஸ்.சங்கரஹரன், இடங்கணசாலை பிட் 1க்கும், அ.புதூா் எம்.ஜெயக்குமாா் எா்ணாபுரத்திற்கும், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பி.அருள்முருகன் தேவூருக்கும், புள்ளாகவுண்டம்பட்டி ஆா்.தமிழ்முருகன் அரசிராமணி பிட் 2க்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT