சேலம்

ரயில் நிலைய கழிப்பறையிலிருந்து ஆண் சடலம் மீட்பு

12th Jul 2023 02:15 AM

ADVERTISEMENT

சேலம் நகர ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

சேலம் நகர ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதையடுத்து பயணிகள் அந்தப் பகுதிக்கு சென்று பாா்த்தனா். அப்போது கழிப்பறையில் இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். இதைத் தொடா்ந்து, சேலம் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சேலம் நகர போலீஸாா் ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த இளைஞருக்கு சுமாா் 40 வயது மேல் இருக்கும், அவரது ஊா் விவரம் பற்றி எதுவும் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும் உடல்நிலை பாதித்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT