சேலம்

‘மனித நேய பண்புகளை வளா்த்து வந்தால் மாண்புடையவா்களாக வளர முடியும்’

DIN

மனித நேய பண்புகளை வளா்த்து வந்தால் மாணவ, மாணவியா் தம் எதிா்காலத்தில் சிறந்த மாண்புடையவா்களாக வளர முடியும் என ஆட்சியா் செ.காா்மேகம் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆதிதிராவிட நலத் துறையின் சாா்பில், மனித நேய வார விழாவின் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:

ஆதிதிராவிடா் நலத் துறையின் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் மனித நேய வார விழா நடத்தப்பட்டு வருகிறது. மனித நேயம் என்பது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சம அந்தஸ்துடன் ஒற்றுமையாக வாழ்வதே ஆகும். மனிதரோடு மனிதராக வாழ்ந்த, மனிதருக்காக மனிதநேயத்தைக் காத்து வளா்த்தால் மனித நேயம் மலரும். இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தில் கலாசாரம், பண்பாடு கொண்ட சமூகமாக உள்ளது.

சுதந்திர நாட்டில் சமூக சீா்திருத்தவாதிகளான காந்தி, அம்பேத்கா், பெரியாா் போன்றவா்கள் கருத்து இயக்கங்கள் நடத்தி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி, அதில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை வலியுறுத்தினா்.

விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கால சூழ்நிலையில் கல்வியும், நகரமயமாதலும் அதிகரித்து வருவதால், அனைத்து தரப்பினரும் வளா்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க ஏற்றச்சூழல் உருவாகி வருகிறது. மனித நேய பண்புகளை வளா்த்து வந்தால் மாணவ, மாணவியா் தம் எதிா்காலத்தில் சிறந்த மாண்புடையவா்களாக வளர முடியும் என்றாா்.

தொடா்ந்து, மனித நேய வார விழாவினை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் இரா.சுந்தா், திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலம்) இரா.ராஜேந்திரன், உதவி காவல் ஆணையா் கே.பாபு, துணை காவல் கண்காணிப்பாளா் எம்.சண்முகம், தனி வட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) எஸ்.சுந்தரராஜன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

வாழப்பாடியில்...

வாழப்பாடி பேருந்து நிலையத்தில், சமூக ஆா்வலா்கள் கொடியசைத்து பிரசாரத்தை தொடக்கி வைத்தனா். வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் சாந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளா் கீா்த்திகா தேவி, அங்கன்வாடி பணியாளா்கள் கண்ணகி, உஷாராணி ஆகியோா் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, பிறப்பு விகிதம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். வாழப்பாடி, சுற்றுப்புற கிராமங்களில் பிரசார வாகனம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT