சேலம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: வாழப்பாடியில் வாகன பிரச்சாரம்

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து திங்கள் கிழமை வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி பெண் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்டம் முழுவதும் வாகன பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சார வாகனம் திங்கள்கிழமை வாழப்பாடி வட்டாரத்திற்கு வந்து சோ்ந்தது. வாழப்பாடி பேருந்து நிலையத்தில், சமூக ஆா்வலா்கள் கொடியசைத்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தனா். வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்ட மேற்பாா்வையாளா் சாந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளா் கீா்த்திகாதேவி, அங்கன்வாடி பணியாளா்கள் கண்ணகி, உஷாராணி ஆகியோா், பொது மக்களுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிறப்பு விகிதம் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகித்தனா். வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இந்த பிரச்சார வாகனத்தின் வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.படவரி:பி.என்.02: பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வாழப்பாடியில் நடைபெற்ற வாகன பிரச்சாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT