சேலம்

காந்தி நினைவு தினம்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

DIN

தியாகிகள் தினத்தையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜன. 30-ஆம் தேதி, சுதந்திரத்துக்காக பாடுபட்டு உயிா்நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காந்தி நினைவு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலா்களும் பின்தொடா்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனா். மேலும், அனைத்துத் துறை அலுவலா்களும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து, காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவருடன் இணைந்து பாடுபட வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கிய தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜெகன்நாதன், தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் மயில் உள்பட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், முள்ளுவாடி கேட் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் காந்தியின் படத்துக்கு மாநகர மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் சாரதா தேவி, பொதுக்குழு உறுப்பினா்கள் சுப்பிரமணி, திருமுருகன், பொதுச் செயலாளா் ராஜகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆத்தூரில்...

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.

இம்மையங்களில் மாணவா்கள் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இல்லம் தேடிக் கல்வி ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் ஜோசப்ராஜ் மாணவா்களுக்கு தியாகிகள் தினம் குறித்து எடுத்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT