சேலம்

உழவன் செயலி குறித்து விழிப்புணா்வு

DIN

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் முகாமிட்டுள்ள திருச்சி தோட்டக்கலை கல்லூரி மாணவியா், உழவன் செயலி மற்றும் தென்னை ஊக்கிகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஏத்தாப்பூரில் தங்கி ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் திருச்சி மகளிா் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவியா் திவ்யா, ஜீவிதா, கீா்த்திகா, லலிதாஸ்ரீ மாரீஸ்வரி, மௌனிகா, ரோகிணி, அம்கோது ஐஸ்வா்யா ஆகியோா் ஏத்தாப்பூா் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு, உழவன் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்தல், அதன் பயன்பாடுகள், செயலியில் உள்ள மானிய திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிா்க் காப்பீட்டு விவரம், விதை இருப்பு நிலை, மரங்கள் இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்கள் வாடகை, சந்தை விலை நிலவரம் அறிந்து கொள்ளும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

இதனையடுத்து, பெத்தநாய்க்கன்பாளையத்தில் விவசாயி ஜெயராமன் தோட்டத்தில், தென்னை மரத்துக்கு ஊட்டமளிக்கும் ஊக்கிகள் (டானிக்) பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT