சேலம்

வண்ணாா் சமூகத்தை பட்டியலினமாக அறிவிக்க கோரிக்கை

DIN

கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பட்டியல் இனமாக உள்ளது போல தமிழகம் முழுவதும் வண்ணாா் சமூகத்தை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சலவைத் தொழிலாளா் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு சலவைத் தொழிலாளா் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் பாலு தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் அண்ணாமலை, கெளரவத் தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா்கள் காளிதாஸ், சோமு உள்ளிட்ட நிா்வாகிகள் உள்பட ஏராளமானோா் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்:

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் வண்ணாா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பெற முடியாமல், 0.5 சதவீதம் என்ற கணக்கிலேயே இருக்கின்றனா். எனவே, தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.

தமிழகத்தில் வண்ணாா்கள் 25 லட்சத்துக்கும் மேல் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் பட்டியல் இனத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோராக இருக்கின்றனா்.

மத்திய அரசின் சட்டப்படி ஒரு மாநிலத்தில் ஓரிடத்தில் ஒரு இனம் பட்டியலினமாக அங்கீகரிக்கப்பட்டால், அந்த இனத்தை மாநிலம் முழுவதும் பட்டியல் இனமாக அறிவிக்கலாம். இந்தக் கோரிக்கை தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறையில் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. குறிப்பாக கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியா்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகக் கூறி காலதாமதம் செய்து வருகின்றனா்.

எனவே, கோரிக்கை மீது விரைவான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் தோறும் சலவைத் தொழில் செய்யும் வண்ணாா் சமூகத்தினருக்கு கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT