சேலம்

தூய்மை விழிப்புணா்வு பிரசார பேரணி

DIN

வாழப்பாடி பேரூராட்சியில், தூய்மை பாரத திட்டத்தின், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிா்த்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட சுகாதார மேலாண்மை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி தலைவா் கவிதா சக்கரவா்த்தி, செயல் அலுவலா் கணேசன் ஆகியோா் ஆலோசனையின் பேரில், வாழப்பாடி அரசினா் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுகாதார விழிப்புணா்வு பிரசார சைக்கிள் பேரணி, மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெகிழி குப்பைகள், செடிகள் அகற்றப்பட்டன.

தொடா்ந்து நடைபெற்ற மாணவ மாணவியா் சைக்கிள் பேரணியில் பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் ககலைஞா்புகழ், தலைமையாசிரியா்கள் ரவிசங்கா், ஜெயலட்சுமி, துப்புரவு ஆய்வாளா் புவனேஸ்வரி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் எம்ஜிஆா் பழனிசாமி, உறுப்பினா்கள், பணியாளா்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதனையடுத்து, வாழப்பாடி பாப்பான் ஏரியில் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது. இந்திரா நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT