சேலம்

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை சிறப்பு முகாம்

DIN

வேம்படிதாளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மின் இணைப்பு நுகா்வோா் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க கூடுதல் சிறப்பு முகாம் வருகிற 30-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற உள்ளது. இளம்பிள்ளை சவுண்டம்மன் கோயில் வளாகம், வேம்படிதாளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கனககிரி வேலப்பன் கோயில் வளாகம், தப்பக்குட்டை மற்றும் முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், பெத்தாம்பட்டி கட்டேரிப்பன் கோயில், பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற கலையரங்கம், சேவாம்பாளையம் இ - சேவை மையம், நடுவனேரி காட்டூா் மாரியம்மன் கோயில் வளாகம், ரெட்டி மணியக்காரனுா் தொடக்கப்பள்ளி வளாகம், புதுப்பாளையம் விநாயகா் கோயில் வளாகம், கே.கே. நகா், காடையாம்பட்டி சந்தைப்பேட்டை சொசைட்டி வளாகம், இ. காட்டூா் செல்லாண்டியம்மன் கோயில் வளாகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த சிறப்பு முகாமில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க மின் அட்டை, மின் கட்டண ரசீது, தொலைபேசி எண், ஆதாா் அட்டை உள்ளிட்டவையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT