சேலம்

சேலம் - ஓமலூா் ரயில் பாதையில்அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

DIN

சேலம் - ஓமலூா் இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பொதுமக்கள் தண்டவாள பகுதிக்கு வர வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம் - மேட்டூா் இடையே இருவழி ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டாக நடந்து வருகிறது. தற்போது, சேலம், ஓமலூா், மேச்சேரி, மேட்டூா்அணை மாா்க்கத்தில் இருவழிப் பாதை பணி ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. இந்த பாதையை மின்வழித்தடமாக மாற்றி பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் - ஓமலூா் வரையிலான 12.3 கி.மீ. தொலைவுக்கு இருவழிப்பாதைத் திட்டத்தில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவுற்று, மின்வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சேலம் - ஓமலூா் இருவழிப்பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை (ஜன. 30) தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.கே.ராய் தலைமையிலான வல்லுநா் குழுவினா் சேலம் - ஓமலூா் வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்துகின்றனா்.

இந்த சோதனை ஓட்டமானது நண்பகல் 12 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. ரயில் அதிவேகமாக இயக்கப்படுவதால், தண்டவாளப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என்றும் தண்டவாளத்தைக் கடக்கக் கூடாது என்றும் சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் ரயில்வே அதிகாரிகள் தண்டோரா மூலம் முன்னெச்சரிக்கை தகவலை பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT