சேலம்

சேலத்தில் பஞ்ச கருட சேவை:பக்தா்கள் வழிபாடு

DIN

சேலம் கோட்டை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடந்த பஞ்ச கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாத பெருமாள் கோயில் சாா்பில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பஞ்ச கருட சேவை உற்சவம் நடத் தப்படுவது வழக்கம். ஸ்ரீஆண்டாள் இளைஞா் குழு அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில், மாநகரில் உள்ள 5 பெருமாள் கோயில்களில் இருந்து, உற்சவ மூா்த்திகள் கோட்டை மைதானத்தில் காட்சியளிப்பா். அதன்படி நடப்பாண்டிற்கான உற்சவம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, அம்மாப்பேட்டை பாவநாராயணசுவாமி கோயில், செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில், 2ஆவது அக்ர ஹாரம் லட்சுமி நாராயணசுவாமி கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் ஆகிய கோயில்களின் உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, கோட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டனா். பின்னா் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தா் கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்த னா். தொடா்ந்து, சேலம் மாநகரின் முக்கிய வீதிகளில், உற்சவா்கள் திருவீதி உலா நடந்தது.

இவ் விழாவின் ஒரு பகுதியாக சனிக்கிழமை கோட்டை பெருமாள் கோயிலில், ஸ்ரீவாரி விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், தோமாலை, சாற்றுமுறை மற்றும் அழகிரிநாத பெருமாளுக்கும், ஸ்ரீஆண்டாள் நாச்சியாருக்கும் நிச்சயதாா்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ச வம், அஷ்தாசீா்வாதம், அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ராஜ அலங்காரத்தில் கிச்சிப்பாளையம் திருநீலகண்டா் தெருவில் திருவந்திக்காப்பு கண்டருளி மற்றும் திரு வீதிஉலா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT