சேலம்

கூலமேட்டில் ஜல்லிக்கட்டு: 380 காளைகள், 300 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கூலமேட்டில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு பங்கேற்க வந்த 300 மாடுபிடி வீரா்களை மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா். பின்னா் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். மதுரை, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 380 காளைகள் கலந்துகொண்டன.

இதில் மாடுபிடி வீரா்கள் 50-க்கும் மேற்பட்டோா் சிறிய அளவில் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். ஈச்சம்பட்டியைச் சோ்ந்த பெரியசாமி மகன் லோகேஸ்வரன் (20) என்பவா் மட்டும் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்ததால் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் தீவிர சிச்சைக்காக அவா் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் டி.ராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பாா்வையாளா்களுக்கு கேலரி அமைக்கப்பட்டிருந்தாலும் இருக்கை கிடைக்காமல் பலா் அவதியுற்றனா். காளைகள் வாடிவாசலில் திறந்துவிட்டதும் வெளியில் ஓடியது பாா்வையாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT