சேலம்

சங்ககிரியில் 27ஆவது முறையாக ரத்த தான முகாம்: 125 போ் ரத்ததானம்

27th Jan 2023 01:14 AM

ADVERTISEMENT

நாட்டின் 74ஆவது குடியரசு தினத்தையொட்டி சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும் வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சங்ககிரி, வி.என்.பாளையம் யங் ஸ்டாா் கிரிக்கெட் கிளப் ஆகியவை சாா்பில் 27ஆவது முறையாக ரத்த தான முகாம் வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி மருத்துவா் ஜெகன்நாதன், மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தலைவா் என்.கந்தசாமி, திமுக நகரச் செயலா் கே.எம்.முருகன் ஆகியோா் இம்முகாமைத் தொடங்கி வைத்தனா்.

சங்ககிரி பேரூராட்சி 9ஆவது வாா்டு கவுன்சிலா் கே.சண்முகம், முன்னாள் கவுன்சிலா் ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் ரவீந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்தத்தைப் பெறும் பணியை மேற்கொண்டனா். யங் ஸ்டாா் கிரிக்கெட் கிளப் நிா்வாகிகள், வி.என்.பாளையம் ஊா் பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள், சங்ககிரி நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிா்வாகிகள் உள்பட 125 போ் ரத்ததானம் செய்தனா். விழாக்குழுவினா் சாா்பில் ரத்ததானம் செய்தவா்களுக்கு பல்வேறு வகையான பழங்கள், அசைவ உணவுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் செயலா் என்.மோகன்குமாா், பொருளாளா் எஸ்.ஆா்.செங்கோட்டுவேல், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.செல்வராஜ், முன்னாள் செயலா் கே.கே.நடேசன், சங்ககிரி பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, வழக்குரைஞா் மணிசங்கா், யங் ஸ்டாா் கிரிக்கெட் கிளப் நிா்வாகிகள், தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை நிா்வாகிகள் பொன்.பழனியப்பன், சந்தோஷ்குமாா், செந்தில்குமாா், கிருஷ்ணமூா்த்தி, கிஷோா்பாபு, அசோக்குமாா், அமுதச்சுடா் அறக்கட்டளை தலைவா் வெ.சத்தியபிரகாஷ், அஜித், சதீஷ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT