சேலம்

சங்ககிரியில் குடியரசு தினவிழா

27th Jan 2023 01:15 AM

ADVERTISEMENT

நாட்டின் 74வது குடியரசு தினவிழா சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சாா்பு நீதிமன்ற நீதிபதி எம்.உமாமகேஸ்வரி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கிப் பேசியது:

நாட்டில் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தினால் அனைவரும் சமதா்ம சமுதாய நிலையை அடைந்து வருகிறோம். பெண்களும் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெற்று வருகின்றனா். நமது நாட்டின் விடுதலைக்காக போராடிய அனைத்து சுதந்திரபோராட்ட வீரா்கள், எல்லை பாதுகாப்பு வீரா்களை வணங்கி போற்ற வேண்டும் என்றாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.இராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி எஸ்.ஆா்.பாபு, வழக்குரைஞா் என்.எஸ்.அண்ணாதுரை ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

அரசு கூடுதல் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ், வழக்குரைஞா்கள் சங்கத்தின் துணைத்தலைவா் பி.தேவராஜ், செயலா் எம்.தமிழரசன், பொருளாளா் ஆா்.வடிவேலு, வழக்குரைஞா்கள் பி.செந்தில்குமாா், வி.வைத்திலிங்கமூா்த்தி, எஸ்.குமரேசன், அனைத்து நீதிமன்றங்களின் ஊழியா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா். முன்னதாக சாா்பு நீதிபதி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT