வாழப்பாடியில், வட்டார வேளாண்மை மேலாண்மை திட்டக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராம சேவை மைய கட்டட வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு, வட்டார வேளாண்மை திட்ட ஆத்மாக் குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி தலைமை வகித்தாா். வேளாண்மை உழவா் நலத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகள், ஆத்மாக் குழு உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
வேளாண்மை சாா்ந்த துறைகளில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத் திட்டங்கள், வேளாண் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பு உத்திகள் குறித்து விவசாயிகள், அதிகாரிகள் கலந்துரையாடினா்.