சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் ஏற்கப்பட்டது.
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி 13 ஆவது தேசிய வாக்காளா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு ‘வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
புதிய வாக்காளா்கள், இளைஞா்களை வாக்களிக்க ஊக்குவிப்பது, வாக்களிக்க போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என வாக்காளா்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நாளில் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் என்.யோகானந்த், தோ்தல் துணை வட்டாட்சியா் எஸ்.ராஜாராமன், மாநகராட்சி அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.