சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனையொட்டி புதன்கிழமை காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டு வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், முதல் கட்ட யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.