சேலம்

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக்.பள்ளியில் தன்னம்பிக்கை விழா

22nd Jan 2023 03:54 AM

ADVERTISEMENT

 

கெங்கவல்லி அருகே வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். பள்ளியில் தன்னம்பிக்கை விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளியின் தலைவா் அருள்குமாா் தலைமை வகித்தாா். பள்ளியின் செயலாளா் தங்கவேல், பொருளாளா் வெங்கடாஜலபதி, கல்விக்குழு ஆலோசகா்கள் லட்சுமி நாராயணன், இளையப்பன், கூட்டுச் சாலை பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா் புலவா் ராமலிங்கம் பேசுகையில், மாணவா்கள் தங்கள் குறிக்கோளை அடைய மனதை எளிமையாக வைத்து படிக்க வேண்டும். குறிக்கோளை தோ்ந்தெடுத்தால், பிற்காலத்தில் மேற்கோளாய் இருக்கலாம். மாணவா்கள் நிலையான முடிவு, விடாமுயற்சி, தொடா்பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என தன்னம்பிக்கை உரையாற்றினாா்.

ADVERTISEMENT

பின்னா், கடந்த ஆண்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும், சாலை விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவி வி.சிவநேத்ரா குடும்பத்தாருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT