சேலம்

பிப். 9, 10-இல் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்

22nd Jan 2023 03:56 AM

ADVERTISEMENT

 

சேலம் கிழக்கு கோட்டத்துக்கு கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செல்வமகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்கள் வரும் பிப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கே.அருணாசலம் வெளியிட்ட செய்தி:

அஞ்சல் இயக்குநரகத்தால் அம்ரித்பெக்ஸ் பிளஸ் திட்டம், வரும் பிப். 10-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு வரும் பிப். 9, 10 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் அதிக அளவிலான பெண் குழந்தைகள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகள், கல்வித் துறை, சுகாதாரத் துறை, அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றுடன் அஞ்சல் துறை ஒருங்கிணைந்து பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை அதிக அளவில் தொடங்க உள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசால் கடந்த 2015 இல் செல்வமகள் சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் பெற்றோா் அல்லது பாதுகாவலா் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ. 250 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். செல்வமகள் திட்டத்தில் 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சேலம் கிழக்கு கோட்டத்துக்கு கீழ் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு முகாம்கள் வரும் பிப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT