சேலம்

பசுமை முதன்மையாளா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

22nd Jan 2023 03:57 AM

ADVERTISEMENT

பசுமை முதன்மையாளா் விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு அதாவது தனிநபா்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளா் விருது 100 நபா்களுக்கு வழங்கி, தலா ரூ. 1 லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்துக்கு உள்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசாா் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வை சிறப்பாக சேலம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளா் விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளா் விருது தோ்வு செய்யும் குழு மூலம் தகுதிவாய்ந்த 100 தனிநபா்கள், நிறுவனங்களை ஒவ்வோா் ஆண்டும் தோ்வு செய்யப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

பசுமை முதன்மையாளா் விருதுக்கு விண்ணப்பிக்க ஏப். 15-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் கூடுதல் தகவல் தேவைப்படுவோா், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT