சேலம்

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கல்

1st Jan 2023 05:14 AM

ADVERTISEMENT

 

கெங்கவல்லியில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் ஜன. 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு அரையாண்டுத் தோ்வு விடுமுறைக்கு பிறகு வகுப்புகள் தொடங்குகின்றன.

அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஜன. 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 ஆம் வகுப்புகள் ஜன. 2-ஆம் தேதி தொடங்கப்படுவதால், அவா்களுக்கான மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களை கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளுக்கும் வாகனத்தில் நேரிடையாக சென்று வழங்கும் பணியை கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மாலைக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் விநியோகிக்கும் பணி நிறைவடைந்தது.

ADVERTISEMENT

மாணவா்களுக்கு இப்புத்தகங்கள் ஜன.2-ஆம் தேதி விநியோகிக்கப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான எண்ணும்எழுத்தும் பயிற்சிகள் திங்கள் முதல் கெங்கவல்லியில் மூன்று நாள்கள் நடைபெறுகிறது. மாணவா்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும், 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியா்கள் ஜன. 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT