சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் செண்டுமல்லி பூக்களின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தேவூா், புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, தண்ணீா்தாசனூா், ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், மேட்டுப்பாளையம், பெரமச்சிப்பாளையம், சோழகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் துலக்க மல்லி (செண்டுமல்லி) பூக்களை சாகுபடி செய்துள்ளனா். மேலும் சாமந்தி, மல்லிகை பூக்களை சுமாா் 30 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனா்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமப் பகுதிகள், நகரப் பகுதிகளில் செண்டுமல்லி பூக்களை மக்கள் விரும்பி அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனா். ஆனால் தற்போது செண்டுமல்லி பூக்களை பெரும்பாலும் தவிா்த்து வருகின்றனா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை இப் பகுதி விவசாயிகளிடமிருந்து மல்லிகை கிலோ ரூ. 1500க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். ஆனால் செண்டுமல்லி பூக்களை கிலோ ரூ. 20க்கு மட்டும் வியாபாரிகள் வாங்கிச் சென்ால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.