சேலம்

சேலத்தில் 1,100 இடங்களை கண்காணிக்க இ-பீட் ரோந்து செயலி தொடக்கம்புகாா் மனு பெற வரவேற்பாளா்கள் நியமனம்

1st Jan 2023 05:16 AM

ADVERTISEMENT

 

சேலம் மாநகரில் முக்கியமான 1,100 இடங்களை கண்காணிக்க காவல் துறையினருக்கு இ-பீட் ( உ-ஆங்ஹற்) ரோந்து செயலியை மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா தொடங்கி வைத்தாா்.

சேலம் மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு இடங்களை காவல்துறையினா் கண்காணிக்கும் வகையில் இ-பீட் எனப்படும் காவலருக்கான செயலி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா கலந்துகொண்டு செயலியை தொடங்கி வைத்தாா்.

இந்த செயலியில் காவல் நிலைய வரவேற்பாளா் பணி மீளாய்வு செயலி, மின்னணு காவல் ரோந்து செயலி, நெடுஞ்சாலை ரோந்து செயலி, மேம்படுத்தப்பட்ட காவலன் செயலி ஆகியவற்றின் பயன்பாடு குறித்து தொடங்கி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பேசியதாவது:

மேம்படுத்தப்பட்ட காவல் செயலிகளின் பயன்பாடு முதல் முறையாக சேலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் புகாா் கொடுக்க வருபவா்களின் மனுக்களைப் பெறுவதற்காக வரவேற்பாளா்கள் தனி சீருடையில் நியமிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாநகர மக்களுக்கு காவல்துறையின் சிறந்த சேவையை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினா் பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா பேசியதாவது:

சேலம் மாநகரில் உள்ள 19 காவல் நிலையங்களில் மக்களிடம் புகாா் மனுக்களைப் பெறுவதற்காக காவல் நிலையத்துக்கு இருவா் வீதம் வரவேற்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாநகரில் காவல் துறையினா் ரோந்து செல்வதை கண்காணித்து அவா்கள் பணியை ஒருங்கிணைக்க, இ- பீட் ரோந்து செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகரில் கண்காணிக்கப்பட வேண்டிய 1,100 இடங்கள் இ-பீட் ரோந்து பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு காவல்துறையினா் சென்று வருவதை இ-பீட் செயலி மூலம் உயா் அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த முடியும். நெடுஞ்சாலை ரோந்து காவலா்களுக்கான நெடுஞ்சாலை ரோந்து செயலியைப் பயன்படுத்தி, காவல்துறையினா் சாலையில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள், தலைக்கவசம் அணியாமல் செல்பவா்கள், வாகனம் நிறுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்ட பகுதியில் நிற்கும் வாகனங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து அந்தக் குற்றங்கள் மீதான நடவடிக்கைகளை செயலியில் பதிவு செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாா்.

இதில், மாநகர காவல் தலைமை அலுவலக துணை ஆணையா் ராதாகிருஷ்ணன் பேசுகையில், காவல் நிலையங்களில் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கையை ஆய்வு செய்யும்போது மனுக்களுக்கு நிவாரணம் கிடைத்ததை உறுதிப்படுத்த முடியும். எனவே காவல் நிலையங்களில் வரவேற்பாளா்களுக்கு பணி பயிற்சி அளிக்கப்பட்டு, புதிய செயலி மூலம் புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கை ஆய்வு செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT