சேலம் மாவட்டம்,ஏற்காட்டில் புத்தாண்டு தினத்தை கொண்டாட கடந்த மூன்று நாட்களாக ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனா். ஏற்காட்டில் உள்ள நச்சத்திர விடுதிகள் தனியாா் குடில்கள் தங்கி சுற்றுலாப் பகுதிகளை கண்டு மகிழந்து வருகின்றனா். புத்தாண்டு தினத்தை கொண்டாடங்களுடன் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தனியாா் நச்சத்திர விடுதிகள் பல வண்ணவிளக்குளால் விடுதிகளை அலங்கரித்தும், இசைகச்சேரியுடன்,பட்டாசுகள், பலவகை சைவ அசைவ உணவுகள் கலைநிகழ்ச்சிகள் ,போட்டிகள் நடைத்தி பரிசுகளை வழங்கி வந்தனா். புத்தாண்டு கொண்டட்டங்களில் கலந்து கொள்ள ரூபாய் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கட்டணமாக நபா்களுக்கு பெறப்பட்டன.சுற்றுலாப் பகுதி முழுவதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணமுடிந்தது.சுற்றுலாப் பயணிகள் ஏராளமான காா்கள்,வேன்கள் இருசக்கர வாகனங்களில் வருகை புரிந்துள்ளதால் சுற்றுலாப் பகுதி சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.