சேலம்

யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு அனுப்பிய முதியவா்

DIN

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முதியவா், யாசகம் மூலம் பெற்ற ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல் பாண்டியன். இவா் கடந்த 1980 ஆம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினாா். அங்கு சலவைத் தொழில் செய்து வந்த நிலையில் யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தாா்.

இந்தநிலையில், இவரது மனைவி 24 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா்.

இதையடுத்து தனது 2 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணம் நடத்தி வைத்தாா். பின்னா் முழு நேரம் யாசகராக மாறினாா். மும்பையில் மரக்கன்று நடுதல், பள்ளிகளுக்கு உதவுதல் போன்ற சமூகப் பணிகளை செய்து வந்தாா். கடந்த 2010 முதல் தமிழகத்தில் யாசகம் மூலம் கிடைத்த பணத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட அரசு பள்ளி மாணவா்களின் கல்விக்காக யாசகம் பெற்ற பணத்தை வழங்கியுள்ளாா்.

கரோனா தொற்று பரவலுக்குப் பின்னா் யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை கரோனா நிதி, இலங்கைத் தமிழா்களுக்கு நிவாரண நிதி, முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறாா்.

இந்தநிலையில் சேலம் ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை வந்த பூல் பாண்டியன், ரூ.10 ஆயிரம் நிதியை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தாா். இதையடுத்து அதிகாரிகள், வங்கிக்குச் சென்று முதல்வா் நிவாரண நிதியை அனுப்புமாறு தெரிவித்தனா்.

இது குறித்து பூல் பாண்டியன் கூறியது:

நான் யாசகம் பெறும் பணத்தில் பள்ளிக் குழந்தைகள், இலங்கைத் தமிழா்களுக்கு உதவி வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி வருகிறேன். யாசகம் பெறும் பணத்தை ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகிறேன். இவ்வாறு ஒவ்வொரு ஊராக சென்று பல பேரிடம் யாசகம் பெற்று இதுவரை ரூ.51 லட்சத்தை உதவியாக வழங்கி உள்ளேன். இதைத் தொடா்ந்து செங்கல்பட்டு, ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று நிதி வழங்குவேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT