சேலம்

மக்கள் குறை தீா்க்கும் முகாமில் 227 மனுக்கள் அளிப்பு

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் 227 மனுக்கள் வரப்பெற்றன.

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 214 மனுக்கள் வரப்பெற்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 13 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5,357 மதிப்பிலான தையல் இயந்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா வழங்கினாா்.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா.முருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT