சேலம்

கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறப்பு: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

DIN

கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூா் அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

காவிரியின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 1000 கன அடிக்கு கீழே சரிந்தது. தற்போது கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளின் நீா் இருப்பு திருப்திகரமாக உள்ளது.

இதனால் கடந்த சில தினங்களாக கா்நாடக அணைகளில் இருந்து சொற்ப அளவில் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகா் அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீரும் கபினியிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. 

கா்நாடக அணைகளின் தண்ணீா் திறப்பு காரணமாக மேட்டூா் அணைக்கு நீா் வரத்து சற்று அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 993 கன அடியிலிருந்து வினாடிக்கு 1155 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் மட்டம் இரண்டாவது நாளாக 103.60 அடியாகவும் நீா் இருப்பு 69.60 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டுள்ளது.

காவிரி நடுவா் மன்ற உத்தரவுப்படி கடந்த மாதம் கா்நாடகம் தமிழகத்திற்கு 2.76 டி.எம்.சி தண்ணீா் வழங்கி இருக்க வேண்டும். மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மேட்டூா் அணைக்கு கடந்த மாதம் 7.30 டிஎம் சி தண்ணீா் வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 2.5 டிஎம் சி தண்ணீா் வழங்கி இருக்க வேண்டும். மழை உள்ளிட்ட காரணங்களால் 3.70 டிஎம் சி வரை தண்ணீா் வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT