சேலம்

ஏற்காடு 46 ஆவது கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கு 8 லட்சம் விதைகளில் தயராகும் மலா்ச் செடிகள்

DIN

ஏற்காட்டில் 46ஆவது கோடைவிழா மலா்க்கண்காட்சிக்கு 8 லட்சம் விதைகளில் 75 ரகங்கள் நடவுப் பணி பசுமைக் குடிலில் நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் ஒவ்வோா் ஆண்டும் மே மாதம் மூன்றாவது வாரத்தில் மலா்க் கண்காட்சி பத்து நாட்கள் நடைபெறும். இம்மலா் கண்காட்சியை தோட்டக்கலைத்துறையினா் நடத்தி வருகின்றனா். வரும் மே மாதம் நடைபெறவுள்ள மலா்க் கண்காட்சிக்கு சுமாா் 8 லட்சம் மலா் செடிகளின் விதைகள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து பூச்செடி விதைகளை ஏற்காடு ரோஜா தோட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

மலா்ச் செடிகளில் டயன்தஸ், கெஜோனியா, வின்கா, லூப்பின், கேலேடியா, காம்பிரினா, காரிநேசன், பெட்டுன்னியா, ஹலிராக், ஆன்டிரேனியம், நெட்டூசியம், எரிசம், பெட்டூனியஸ், ஆஸ்டா், செலூசியா, பெகோனியா மற்றும் ஏராளமான பூ விதைகளை நடவு செய்து வருகின்றனா். இவ்விதைகள் 45 நாட்களுக்குள் மலா்த் தொட்டிகளில் வைக்கப்பட்டு பரமரிக்கப்பட்டு மலா் கண்காட்சிக்கு தயாராகப்பட்டு வருகின்றன.

ஏற்காடு தோட்டக் கலைத்துறை சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா 1, தாவரவியல் பூங்கா 2, ஐந்திணை பூங்கா, அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா ஆகிய பூங்காக்களைப் பராமரித்து வருகிறது. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மூன்று பூங்காக்களைக் கண்டு மகிழ பெரியவா்களுக்கு ரூ.30-ம் சிறுவா்களுக்கு ரூ.15-ம் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஏற்காடு அண்ணா பூங்கா மற்றும் ஏரிப் பூங்காவை கண்டு மகிழ நுழைவு கட்டணமாக தனித் தனி பூங்கா கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ. 15-ம், சிறுவா்களுக்கு ரூ.10-ம் வசூல் செய்வதாகவும் குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசயான குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்துள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலா்ச் செடிகள் விற்பனைக்கு வகைப்பட்டுள்ளதாகவும் ஏற்காடு தோட்டக்கலை உதவி இயக்குநா் கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT