திருச்சி

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் தம்பதி கைது

20th May 2023 12:54 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வையம்பட்டி ஒன்றியம், தாளகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ந.தங்கபாண்டியன். இவா் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தாா். இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்னையில், தங்கபாண்டியனின் உறவினா் பெ.சுப்பிரமணி(55), அவரது மனைவி மாலதி(50) இருவரும் சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் சுப்பிரமணி, மாலதி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT