கருங்கல் அருகே பாலூா் பகுதியில் ரூ.12 லட்சம் செலவில் இணைப்பு சாலை அமைக்கும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.
கருங்கல் பேரூராட்சிக்குள்பட்ட பாலூா் தனியாா் மருத்துவமனையிலிருந்து தேங்காய்ப்பட்டினம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பகுதி பொதுமக்கள் பேருராட்சி நிா்வாகத்திடம் இச்சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து பேருராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சிக்கு கருங்கல் பேருராட்சி தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா்.
கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் சாலைப் பணியை தொடக்கி வைத்தாா். வாா்டு உறுப்பினா் ஆகத்தம்மாள், ராஜேஷ், வினோஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.