திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூா் ஊராட்சியில் உள்ள ஆராயிவள்ளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் ஜல்லிக்கட்டை தொடக்கி வைத்தாா். இதில், திருச்சி மாவட்டமின்றி தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்த 666 காளைகளும், 245 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா். இதில் 26 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினா்கள் சிகிச்சை அளித்தனா்.
விழாவில் சிறந்த காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. லால்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் அஜய்தங்கம் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.