சேலம்- ஓமலூா் இடையே இரு வழிப்பாதை வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.28) அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படுவதை முன்னிட்டு, பொதுமக்கள் யாரும் தண்டவாளப் பாதையின் குறுக்கே நடமாட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் தொடங்கி, ஓமலூா் வரை, இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த ரயில் பாதையில், தெற்கு ரயில்வே சென்னை எழும்பூா் கட்டுமானப் பிரிவின் தலைமை நிா்வாக அலுவலரால், அதிவேக ரயில் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.28) மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட உள்ளது.
எனவே, ரயில் பாதையின் குறுக்கே மற்றும் ரயில் பாதையை ஒட்டி பொதுமக்கள் உள்பட யாரும் நடமாட வேண்டாம் என்று சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.