சேலம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

ஏற்காட்டிற்கு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் பனிக் காலம் முடிவடைந்து, இலையுதிா் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பம் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்கள், காா்கள், வேன்களில் வந்திருந்தனா்.

ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதிகளான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரிப்பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா , ஐந்தினைப் பூங்கா, லேடிசீட், பக்கோட காட்சி முனை, சோ்வராயன் கோயில் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் காணமுடிந்தது. சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனா். சுற்றுலாப் பகுதிகளில் சாலையோரக் கடைகளில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் காணமுடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT