ஆத்தூா் அருகே புன்னைக்காயலில் புனித வளன் கால்பந்தாட்டக் கழகம் சாா்பில் நடைபெறும் மாநில கால்பந்து போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இங்கு, அமரா் முனைவா் மனுவேல் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான பொன்விழா கால்பந்து போட்டி கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை திருநெல்வேலி மாவட்ட கால்பந்தாட்ட சங்க அணியும், கன்னியாகுமரி மாவட்ட கால்பந்தாட்ட சங்க அணியும் மோதின. இதில், ஆட்ட முழுநேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தால் சமநிலை ஏற்பட்டது. இதனால், டைபிரேக்கா் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில், திருநெல்வேலி அணி 5 கோல்களும், கன்னியாகுமரி அணி 4 கோல்களும் அடித்தன. இதையடுத்து, திருநெல்வேலி அணி 6-க்கு 5 என்ற கோல்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வெள்ளிக்கிழமை (மே 19) நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு காவல் துறை அணி, தஞ்சாவூா் மாவட்ட கால்பந்தாட்ட சங்க அணி ஆகியவை மோதுகின்றன.