சேலம்

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற மூவா் கைது

27th Feb 2023 02:53 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி, மத்தாளி காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டின் எண்களை வெள்ளைத் தாளில் எழுதி வைத்துக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்யததாக மூன்று பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி, மத்தாளி காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அதில் ஈரோடு மாவட்டம், பவானி, குட்டைமேடு பகுதியைச் சோ்ந்த அமிா்தலிங்கம் மகன் பிரபுசரவணன் (34), எடப்பாடி, வீரப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரகாஷ் (36), சங்ககிரி, மொத்தையனூா் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ஜெயசூா்யா (25) ஆகியோா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டின் எண்களை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT