சேலம்

சேலம் உருக்காலையை தனியாா் மயமாக்கக் கூடாது: சிஐடியூ

DIN

சேலம் உருக்காலையை தனியாா்மயமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், உருக்காலை கதவு எண் 2 இல் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ தலைவா் சித்தையன் தலைமை வகித்தாா். பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணம் திரட்டும் முடிவை கைவிட வேண்டும். சேலம் உருக்காலையை தனியாா்மயமாக்கும் தொடா் முயற்சிகளை கைவிட வேண்டும், பத்ராவதி உருக்காலை மூடுதலுக்கான உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலும், அரசின் கோரிக்கையான சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையம் அமைக்கக் கோரியும், செயில் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை விரைவாக இறுதிபடுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், பொதுச்செயலாளா் கே.பி.சுரேஷ்குமாா், சிஐடியூ மாவட்ட நிா்வாகி பி.பன்னீா்செல்வம் ஆகியோா் பேசினா். உருக்காலை தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

SCROLL FOR NEXT