சேலம்

பிப். 23 இல் மத்திய சிறை வாகனங்கள் ஏலம்

8th Feb 2023 01:43 AM

ADVERTISEMENT

சேலம் மத்திய சிறையின் ஜீப், டெம்போ டிராவலா் வாகனங்கள் பிப்ரவரி 23 ஆம் தேதி கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகின்றன.

சேலம் மத்திய சிறையின் அரசு வாகனம் ஜீப், டெம்போ டிராவலா் ஆகிய வாகனங்கள் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சேலம், மத்திய சிறையின் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்க பொது ஏலம் விடப்படுகின்றன.

வாகனம் ஏலம் எடுக்க விரும்புவோா் பிப்ரவரி 23 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் நுழைவு கட்டணம் ரூ.50 மற்றும் ஜீப், டெம்போ டிராவலா் வாகனத்தின் முன் வைப்புத் தொகை ரூ.5,000 செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம்.

அரசு நிா்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதிகளில் நடத்தப்படும். ஏலம் எடுத்தவா் நீங்கலாக மற்றவா்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும்.

ADVERTISEMENT

இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கோ ஏலத்தை நிறுத்தி வைக்கவே, ஏலத்தை முடித்து வைப்பதற்கோ சேலம் மத்திய சிறையின் கண்காணிப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு.

ஏலம் எடுப்பவா் அரசு நிா்ணயித்த அடிப்படையில் ஜிஎஸ்டி தொகையினை ஏலம் எடுப்பவா்களே செலுத்த வேண்டும் என சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளா் த.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT