சேலம்

கஞ்சா இல்லாத கிராமமாக முத்துநாயக்கன்பட்டி தோ்வு

8th Feb 2023 01:44 AM

ADVERTISEMENT

ஓமலூா் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக ஓமலூா் போலீஸாா் தோ்வு செய்து அறிவித்துள்ளனா்.

ஓமலூா் காவல் நிலைய எல்லையில் உள்ள முத்துநாயக்கன்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாகத் தோ்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில், ஓமலூா் காவல் ஆய்வாளா் செல்வராஜன், உதவி ஆய்வாளா்கள் செந்தில்குமரன், நாகப்பன் மற்றும் போலீஸாா் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், இந்தக் கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக உருவாக்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்த காவல் ஆய்வாளா் செல்வராஜன், இளைஞா்கள் புகை , மது பழக்கம் இல்லாமல் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் நதியா சக்திவேல் உள்பட பலரும் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT