சேலம்

பிப்.11 இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

DIN

பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பிப்ரவரி இரண்டாவது சனிக்கிழமை (பிப்.11) ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறை நிவா்த்தி பெறலாம்.

குறைதீா் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கை மனு அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரா்கள் சாா்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்பட்டால் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்கள் அளிக்கலாம்.

தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT