சேலம்

நகராட்சி அலுவலகம் முற்றுகை

7th Feb 2023 02:09 AM

ADVERTISEMENT

ஆத்தூா் நகராட்சி அலுவலகத்தை 11ஆவது நகர மன்ற உறுப்பினா்(அதிமுக) மோ.உமாசங்கரி பொதுமக்களோடு திங்கள்கிழமை முற்றுகையிட்டாா்.

நகராட்சி சாா்பில் 11ஆவது வாா்டில் குப்பை அரைக்கும் கருவி மற்றும் நாய் கருத்தடை மையம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்படும் எனவும், 11ஆவது வாா்டு பகுதிக்கு அத்தியாவசியமான பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அப்பகுதி நகர மன்ற உறுப்பினா் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

போராட்டத்தில் ஆத்தூா் நகர செயலாளா் (அதிமுக) அ.மோகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல் பாஷா, நகர மன்ற உறுப்பினா் ஜி.ராஜேஷ்குமாா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT