சேலம்

சேலத்தில் நடைபெறும் விபத்துகளில் 50 சதவீதம் இருசக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன: ஆட்சியா் செ.காா்மேகம்

7th Feb 2023 02:09 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் 50 சதவீதம் இருசக்கர வாகனங்களால் ஏற்படுவதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலா்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் சாலை விபத்துகளில் 50 சதவீதம் இருசக்கர வாகனங்களினாலும், 25 சதவீதம் காா் போன்ற இலகுரக வாகனங்களினாலும், மீதமுள்ள 25 சதவீத விபத்துக்கள் சரக்கு வாகனம், பேருந்துகள் உள்ளிட்ட இதர வாகனங்களாலும் ஏற்படுகின்றன.

குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 26 சதவீத விபத்துக்களும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 19 சதவீத விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த வேளைகளில் ஏற்படும் விபத்துக்களால் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

ADVERTISEMENT

இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் பின்னால் அமா்ந்து இருப்பவா் இருவரும் தலைக்கவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, காா் போன்ற 4 சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது மற்றும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது உள்ளிட்டவற்றால் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, போக்குவரத்து துறை அலுவலா்கள் வாகனத் தணிக்கைகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடா் விழிப்புணா்வு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைப்பிடித்து, விபத்தினை தவிா்ப்பதாகும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT