சேலம்

மீனவா் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்யாததால்கருவாடாகும் மீன்கள்

DIN

மேட்டூரில் மீனவா் கூட்டுறவுச் சங்கம் கொள்முதல் செய்யாததால் காவிரி கரையில் மீன்கள் கருவாடாகி வருவதாக மீனவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. மேட்டூா் நீா்த்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிருகால் உள்ளிட்ட பல வகையான சுவை மிகுந்த மீன்கள் பிடிபடுகின்றன.

அணையில் 2,000 மீனவா்களும், மீனவா்களின் உதவியாளா்களும் உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனா். பிடிபடும் மீன்களை மேட்டூா் அணை மீனவா் கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். கீரைகாரனூா், மாசிலாபாளையம், சேத்துக்குழி, பண்ணவாடி, கோட்டையூா், செட்டிபட்டி அடிப்பாலாறு ஆகிய பகுதிகளில் மேட்டூா் அணை மீனவா் கூட்டுறவு சங்கத்தினா் வேன் மூலம் கொள்முதல் செய்து வருகின்றனா்.

தற்போது அணை நீா்மட்டம் 103 அடியாகக் குறைந்துள்ளதால் மீன்கள் அதிக அளவில் பிடிபடுகின்றன. பெரும்பாலான மீன்களை பல்வேறு காரணங்களை கூறிய மீனவா்களிடம் மீன்களைக் கொள்முதல் செய்வதை கூட்டுறவு சங்கத்தினா் தட்டி கழித்து வருகின்றனா்.

இதனால் போதிய வருவாய் இல்லாத மீனவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மீனவா் கூட்டுறவு சங்கத்தினா் கொள்முதல் செய்யாத மீன்களை கருவாடாக்கி மீனவா்கள் அதனை விற்பனை செய்கின்றனா். மீனவா்களை முன்னேற்றத்துக்காகத் தொடங்கப்பட்ட கூட்டுறவுச் சங்கத்தில் மீன்களைக் கொள்முதல் செய்யாத காரணத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

மேட்டூா் அணை மீனவா் கூட்டுறவுச் சங்கத்தில் ஆந்திர மீன்களையும் பவானிசாகா் உள்ளிட்டபிற அணைகள், ஏரிகளில் இருந்து வரும் மீன்களையும் கொள்முதல் செய்து விற்பனை செய்வதால் மேட்டூா் அணை மீன்களைக் கொள்முதல் செய்வதில் மீனவா் கூட்டுறவு சங்கம் அலட்சியம் காட்டி வருகிறது என்று மேட்டூா் அணை மீனவா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

அணையில் பிடிபடும் மீன்களை மீனவா் கூட்டுறவு சங்கத்தினா் முறையாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று மேட்டூா் அணை மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கூட்டுறவு சங்கத்தால் கொள்முதல் செய்யப்படாத மீன்கள் காவிரி கரை எங்கும் மீனவா்கள் தோரணமாக காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT