சேலம்

உலக புற்றுநோய் தினவிழிப்புணா்வுப் பேரணி

6th Feb 2023 07:33 AM

ADVERTISEMENT

 

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சேலம் சமூக சேவை மையம் இணைந்து விழிப்புணா்வுப் பேரணி நடத்தியது.

இப்பேரணியில் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களும் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை நிா்வாக அலுவலா் மருத்துவா் பிரபு சங்கா், மைல்ஸ்டோன் நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் பிரியா ஆகியோா் மாணவா்களுக்கு புற்றுநோய் குறித்து விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சண்முகா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் முதன்மை அலுவலக அலுவலா் எஸ்.சாமுராஜ், சேலம் சமூக சேவை மையத்தின் டேவிட் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT